அகக்கண்ணாடி - டாக்டர் ரைஸ்

'மனநலம்' என்பது அதிகம் பேசப்படாத ஒரு தலைப்பாகவே உள்ளது. சிலர் மனநலம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்றாலும், பலர் மனநலம் பற்றிய தவறான தகவ‌ல்களை இன்றும் நம்பிக்கொண்டு தான் இருக்கிறார்கள். நம் நாட்டில் உடல்நலத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவம் மனநலத்திற்கு கொடுப்பதில்லை. டாக்டர் ரைஸ் எழுதிய 'அகக்கண்ணாடி' எனும் புத்தகம் மனநலம் பற்றிய தவறான மனப்பான்மையை விலக்கி, வாசிப்பாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. 

முதலில் இந்த புத்தகத்தை படிக்க எடுத்த போது, இதில் மனநல மருத்துவம் பற்றிய கோட்பாடுகள் மட்டும் தான் இருக்கும் என்ற எண்ணத்தில் படிக்க ஆரம்பித்தேன், ஆனால் என்னுடைய கனிப்பு தவறு என்று படிக்க படிக்க தான் உணர்ந்தேன். டாக்டர் ரைஸ் இந்த புத்தகத்தை மிகவும் சுவாரஸ்யமாக, மனநலம் பற்றிய முக்கிய தகவல்களை
ஆச்சரியப்பட வைக்கும் நிகழ்வுகளை உதாரணமாக வைத்து அற்புதமாக எழுதியிருக்கறார். 

'Schizophrenia' எனும் மனநோயிற்கும் 'Hebephrenia' எனும் மனச்சிதைவு நோயிற்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்த எனக்கு இந்த புத்தகம் ஒரு 'Eye opener' என்று கூறினால் மிகையாகாது.

இந்த புத்தகத்தை நான் அனைத்து வாசகர்களுக்கும் பரிந்துரைக்கிறேன்.

Comments

Popular Posts